சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20: சங்கக்காரா அபார சதம்.. இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை வெற்றி
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 146 ரன்கள் அடித்தது.;
image courtesy:twitter/@imlt20official
ராய்பூர்,
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் ராய்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் மஸ்டார்டு அரைசதம் அடித்து வலு சேர்த்தார். ஆனால் மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து `146 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 147 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன குமார் சங்கக்கரா அபாரமாக விளையாடி சதமடித்து வெற்றியை தேடி கொடுத்தார். வெறும் 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த இலங்கை 150 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.