ஐ.பி.எல்.2025: இறுதிப்போட்டியில் என்னுடைய ஆதரவு அந்த அணிக்குத்தான் - ஷிகர் தவான்

நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக பெங்களூரு முன்னேறியுள்ளது.;

Update:2025-05-31 21:33 IST

மும்பை,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த தொடரில் லீக் சுற்று நேற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

டெல்லி கேப்பிட்டல்ஸ்,சன்ரைசர்ஸ் ஐதராபாத் ,லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 5 முதல் 10 இடங்களை பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது.

இதில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதனையடுத்து நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது. அடுத்து இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் மும்பை - பஞ்சாப் அணிகள் ஆமதாபாத்தில் நாளை மோதுகின்றன.

இந்நிலையில் இறுதிப்போட்டியில் தன்னுடைய ஆதரவு மும்பை இந்தியன்ஸ் அணிக்குத்தான் என்று இந்திய முன்னாள் வீரர் ஷிகர் தவான் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த முறை ஐ.பி.எல். மிகவும் உற்சாகமாக இருந்தது. இறுதிப் போட்டியை பொறுத்த வரை என்னுடைய ஆதரவு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இருக்கும். அவர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அவர்கள் மிகவும் சமநிலையானவர்கள். அவர்கள் சரியான நேரத்தில் வெற்றிக்கான வேகத்தை அதிகரித்த விதம் சிறப்பானது. மேலும் அவர்கள் மிகவும் வலுவான மற்றும் நன்கு சமநிலையான அணி. எனவே, நான் மும்பை இந்தியன்சுடன் இருக்கிறேன்" என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்