ஐ.பி.எல்.2026: ராஜஸ்தான் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்
இவர் ஏற்கனவே 2021 முதல் 2024-ம் ஆண்டு வரை ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார்.;
image courtesy:PTI
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் அந்த பொறுப்பில் இருந்து விலகினார். இந்நிலையில் டிராவிட்டுக்கு பதிலாக புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கரா நியமிக்கப்பட உள்ளார்.
அவர் ஏற்கனவே 2021 முதல் 2024-ம் ஆண்டு வரை ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார். அதன் பிறகு அந்த அணியின் இயக்குனராக செயல்பட்ட அவர் எதிர்வரும் சீசனில் (2026) இருந்து மீண்டும் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.