ஐ.பி.எல்.: லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ-மும்பை அணிகள் மோதுகின்றன.;

Update:2025-04-04 19:05 IST

லக்னோ,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) லக்னோவில் நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சீசனில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளன. இதனால் இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி லக்னோ முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்