ஐ.பி.எல்.2026: ஏலத்தில் 9 பேர்.. சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள மொத்த வீரர்கள் எத்தனை..?

ஐ.பி.எல். மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 பேரை ஏலத்தில் வாங்கியது.;

Update:2025-12-18 16:57 IST

image courtesy:PTI

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் 10 அணிகளின் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அணியினரும் தங்களிடம் இருந்த கையிருப்பு தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட வீரரை குறி வைத்து பல்வேறு வியூகங்களுடன் வந்திருந்தனர். ஏலத்தை மும்பைச் சேர்ந்த மல்லிகா சாகர் நடத்தினார்.

ஏலத்தில் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) உள்நாட்டு வீரர்களுக்கு குறிவைத்தது. அந்த வகையில் சர்வதேச அனுபவம் இல்லாத உள்நாட்டு வீரர்களான இடக்கை சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் பிரஷாந்த் வீர், சிக்சர் அடிப்பதில் வல்லவரான கார்த்திக் சர்மா ஆகியோரை பெரிய தொகைக்கு வாங்கியது. மொத்தத்தில் சென்னை அணி தங்களுக்கு 9 வீரர்களை எடுத்தது.

முன்னதாக சென்னை அணி 15 வீரர்களை தக்க வைத்திருந்தது. அதுபோக சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் வாங்கியது. தற்போது ஏலத்தில் 9 வீரர்களை வாங்கியுள்ளது. இதனையும் சேர்த்து சென்னை அணியில் மொத்தம் 25 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் முழு விவரம்:

மகேந்திரசிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டான், ராமகிருஷ்ணா கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், நாதன் எல்லீஸ், ஸ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங், சஞ்சு சாம்சன், அகீல் ஹோசைன், பிரஷாந்த் வீர், கார்த்திக் சர்மா, மேத்யூ ஷார்ட், அமன் கான், சர்பராஸ் கான், மேட் ஹென்றி, ராகுல் சஹார் மற்றும் ஜாக் பவுல்க்ஸ். 

Tags:    

மேலும் செய்திகள்