ஐ.பி.எல். : ஆர்சிபி அணி 5 கோப்பைகளை வெல்ல 72 வருட.. - சிஎஸ்கே முன்னாள் வீரர் கிண்டல்

ஐ.பி.எல். தொடரின் முதல் கோப்பையை 18-வது சீசனில் பெங்களூரு கைப்பற்றியது.;

Update:2025-08-19 23:13 IST

image courtesy:PTI

பெங்களூரு,

அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது.

ஐ.பி.எல். அறிமுகம் ஆன 2008-ம் ஆண்டில் இருந்தே ஆடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு முதல் 17 ஆண்டுகள் பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை. இதனால் அந்த அணி பல விமர்சங்களை எதிர்கொண்டது. இருப்பினும் அந்த அணிக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டே சென்றதே தவிர குறையவில்லை.

அந்த சூழலில் அந்த அணியின் 18 ஆண்டு கால ஏக்கம் இந்த ஐ.பி.எல். சீசனோடு தணிந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் முதல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியை அணியின் வீரர்கள் மட்டுமின்றி பல ரசிகர்களும் வெறித்தனமாக கொண்டாடி தீர்த்தனர்.

இந்நிலையில் ஐந்து முறை ஐ.பி.எல். பட்டம் வெல்வது மிகவும் கடினம் என்று சி.எஸ்.கே. முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். அத்துடன் ஆர்சிபி அணி 5 கோப்பைகளை வெல்ல 72 வருடங்கள் ஆகும் என அவர் கிண்டலடித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “இது மிகவும் நன்றாக இருந்தது. இப்போது ஆர்.சி.பி.க்கு ஐ.பி.எல். வெல்வது எவ்வளவு கடினம் என்பது தெரிந்துவிட்டது. ஐந்து முறை வெல்வது எவ்வளவு கடினம் என்பதை இப்போது அவர்கள் உணர்ந்திருப்பார்கள். ஒரு முறை வெல்வதே இவ்வளவு கடினமாக இருக்கும்போது, ஐந்து முறை வெல்வது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

ஆகவே, 18 வருடங்களில் பெங்களூரு அணி ஒரு கோப்பையை வென்றுள்ளது என்றால், 5 கோப்பைகளை வெல்வதற்கு அந்தணிக்கு 72 வருடங்களாகும். அவர்கள் வெற்றி பெறுவதற்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டது நல்லது, இல்லையா? இப்போது அவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆர்.சி.பி. அமைதியாக இருக்கும். அவர்கள் வெற்றியாளர்கள் கிளப்பில் நுழைந்துவிட்டார்கள்” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்