இஷான் கிஷன் அதிரடி....ஐதராபாத் அணி 231 ரன்கள் குவிப்பு

இஷான் கிஷன் 94 ரன்கள் குவித்தார்;

Update:2025-05-23 21:24 IST

லக்னோ,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.இந்த நிலையில் லக்னோவில் இன்று நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்கத்தில் டிராவிஸ் ஹெட் 17 ரன்களில் வெளியேறினார். அபிஷேக் சர்மா அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து கிளாஸன் அதிரடியாக விளையாடி 24 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார். அவர் அரைசதமடித்தார் .

இஷான் கிஷன் 94 ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 232 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்