அவர்கள் இல்லாதது அவமானம் - இந்திய டெஸ்ட் தொடர் குறித்து கிறிஸ் வோக்ஸ் ஆதங்கம்
இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.;
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்ட தொடர் இது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அத்துடன் ரோகித், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவர்கள் இல்லாமல் இந்திய அணி எப்படி விளையாட போகிறது? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது. மேலும் அவர்களின் இடத்தை நிரப்பப்போவது யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தரமான வீரர்கள் விளையாட மாட்டார்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவமானமான விஷயம் என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளாரான கிறிஸ் வோக்ஸ் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடுவது எப்போதும் நல்லதாக இருக்கும். ஏனெனில் அந்தத் தொடரில் நீங்கள் வெற்றி பெறுவதற்கு கடினமாக போராட வேண்டும். கடந்த பல வருடங்களாக நாங்கள் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு எதிராக நல்ல போட்டியைக் கொண்டிருந்தோம். தற்போது அவர்கள் இங்கே இல்லாதது இந்தபோட்டிக்கு அவமானமானது
இருப்பினும் இந்திய கிரிக்கெட்டில் ஆழமான திறமை இருக்கிறது. இங்கே வந்துள்ள வீரர்கள் ஏற்கனவே தங்களுடைய திறமைகளை நிரூபித்த உயர்தரமானவர்களாக இருப்பார்கள் என்று உறுதியாக சொல்வேன்" என கூறினார்.