வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடித்தருவது மகிழ்ச்சி அளிக்கிறது - மிட்செல் சாண்ட்னெர்

முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.;

Update:2025-02-15 11:29 IST

Image Courtesy: AFP

கராச்சி,

பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து (4 புள்ளி), பாகிஸ்தான் (2 புள்ளி) அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தென் ஆப்பிரிக்கா(2 ஆட்டத்திலும் தோல்வி) வெளியேறியது.

இதனையடுத்து கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்நிலையில், இந்த ஆட்டம் முடிந்த பின்னர் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னெர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இப்போட்டியில் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடித்தருவது நல்லது.

மேலும், இந்த மைதானம் இருவேறு விதமாக செயல்பட தொடங்கியதால், எங்கள் பந்துவீச்சாளர்கள் ஒரே லைன் மற்றும் லெந்தில் பந்துவீச்சி எதிரணியை அழுத்ததில் வைத்திருக்க உதவியது. ஏனெனில், வில்லியம் ஓ ருர்க் போன்ற பந்துவீச்சாளர் பந்தை ஸ்விங் செய்யும் போது அது பேட்டர்களுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். அவருடன் இணைந்த ஜேக்கப் டபியும் சிறந்த லைனின் பந்துவீசினார்.

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டாம் லாதம் அரைசதம் அடித்திருப்பது அவர் மீதான அழுத்தத்தை குறைத்திருக்கும் என்று நம்புகிறேன். மேலும் அணியின் வெற்றிக்கு ஒவ்வொரு வீரரும் தங்கள் பங்களிப்பை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்