விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் தமிழக அணியின் மாபெரும் சாதனையை சமன் செய்த கர்நாடகா

32-வது விஜய் ஹசாரே கோப்பை தொடரில் கர்நாடகா சாம்பியன் பட்டம் வென்றது.;

Update:2025-01-19 08:27 IST

Image courtesy:twitter/@BCCIdomestic

வதோதரா,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 32-வது சீசன் நேற்று நிறைவடைந்தது. இதில் விதர்பா அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடகா சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த தொடரில் கர்நாடகா சாம்பியன் பட்டம் வெல்வது இது 5-வது முறையாகும். அந்த அணி ஏற்கனவே 2014, 2015, 2018, 2020-ம் ஆண்டுகளிலும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

இதன் மூலம் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியின் மாபெரும் சாதனையை கர்நாடகா சமன் செய்துள்ளது. தமிழக அணியும் 5 முறை இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்