கிளாசன் அதிரடி சதம்.. கொல்கத்தாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த சன்ரைசர்ஸ்

சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது.;

Update:2025-05-25 21:19 IST

டெல்லி,

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 68வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

டெல்லியில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுட்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா, 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிளாசனுடன் ஜோடி சேர்ந்த ஹெட், அதிரடி காட்டினார். அவர் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

எனினும், கிளாசன் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் வெறும் 38 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதில் 7 பவுண்டரியும், 9 சிக்சர்களும் அடங்கும். அவர் 105 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சுனில் நரேன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்