மேஜர் லீக் கிரிக்கெட்; சூப்பர் கிங்ஸை வீழ்த்திய வாஷிங்டன் அணி

வாஷிங்டன் தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் ஓவென் 89 ரன் எடுத்தார்.;

Update:2025-06-23 09:59 IST

Image Courtey: @WSHFreedom / @MLCricket

டல்லாஸ்,

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (இந்திய நேரப்படி இன்று) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - வாஷிங்டன் ப்ரீடம் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 220 ரன்கள் குவித்தது. டெக்சாஸ் தரப்பில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 69 ரன் எடுத்தார். வாஷிங்டன் தரப்பில் மிட்செல் ஓவென் 3 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 221 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த வாஷிங்டன் அணி 19.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 223 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வாஷிங்டன் தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் ஓவென் 89 ரன் எடுத்தார். டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஆடம் மில்னே 3 விக்கெட் வீழ்த்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்