ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: கிளென் பிலிப்சுக்கு மாற்றுவீரர் நியூசிலாந்து அணியில் சேர்ப்பு
நியூசிலாந்து - ஜிம்பாப்வே முதல் டெஸ்ட் போட்டி 30-ம் தேதி தொடங்க உள்ளது.;
image courtesy:ICC
வெலிங்டன்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 30-ம் தேதி தொடங்க உள்ளது. இதனையடுத்து 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்க உள்ளது. 2 போட்டிகளும் புலவாயோவில் நடைபெற உள்ளன.
இந்நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த கிளென் பிலிப்ஸ் காயம் காரணமாக விலகினார். இதனையடுத்து அவருக்கு மாற்று வீரராக ஆல் ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் முதல் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அணியின் சூழ்நிலைக்கேற்ப அவர் 2-வது போட்டியில் இடம்பெறுவாரா? இல்லையா? என்பது பின்னர் முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.