நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் 4-வது டி20: மழை காரணமாக ஆட்டம் ரத்து
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.;
image courtesy:twitter/@BLACKCAPS
நெல்சன்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி நெல்சனில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சாண்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 6.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 38 ரன்கள் அடித்திருந்தபோது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆமீர் ஜாங்கோ 12 ரன்களுடனும், ஷாய் ஹோப் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஏறக்குறைய 2 மணி நேரம் ஆகியும் மழை நிற்காததால் ஆட்டத்தை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் தொடரில் நியூசிலாந்து அணியின் முன்னிலை 2-1 என்ற கணக்கில் அப்படியே தொடர்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி 13-ம் தேதி நடைபெற உள்ளது.