நானில்லை.. தொடர் நாயகன் விருதுக்கு அவர்தான் தகுதியானவர் - கம்பீர் தேர்வை குறை கூறிய ஹாரி புரூக்

இங்கிலாந்து அணியின் தொடர் நாயகனாக ஹாரி புரூக்கை கவுதம் கம்பீர் தேர்வு செய்தார்.;

Update:2025-08-07 18:34 IST

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.

இந்தியா சார்பில் சுப்மன் கில்லும், இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக்கும் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டனர். இங்கிலாந்து பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம், சுப்மன் கில்லையும், இந்திய பயிற்சியாளர் கம்பீர் ஹாரி புரூக்கையும் தொடர் நாயகன் விருதுக்கு தேர்வு செய்தனர்.

இந்நிலையில் தன்னை விட ஜோ ரூட் தான் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் என்று கம்பீரின் தேர்வை ஹாரி புரூக் குறை கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “என்னை விட ஜோ ரூட்தான் அதிகமான ரன்கள் குவித்திருந்தார். அனேகமாக அவருக்குத்தான் தொடர்நாயகன் விருது வழங்கியிருக்க வேண்டும். கோடை காலத்தின் நாயகன் ஜோ ரூட். பல ஆண்டுகளாக அப்படித் தான் இருக்கிறார்” என்று கூறினார்.

அவர் கூறுவது போல ஹாரி புரூக்கை (2 சதம் உள்பட 481 ரன்) விட ஜோ ரூட்தான் (3 சதம் உள்பட 537 ரன்) அதிக ரன்கள் குவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்