ஆசிய கோப்பையை வழங்க பாகிஸ்தான் மந்திரி சம்மதம்
மொசின் நக்வி கோப்பையை தன்னோடு எடுத்து கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார்;
துபாய்,
துபாயில் நடந்த 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனும், பாகிஸ்தான் உள்துறை மந்திரியுமான மொசின் நக்வி பரிசுக் கோப்பையை வழங்க இருந்தார். ஆனால் அவரிடம் இருந்து கோப்பையை வாங்கமாட்டோம் என்று இந்திய அணி மறுத்து விட்டது.
அவருக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் கலீத் அல்ஜரூனிடம் இருந்து பெற்றுக்கொள்கிறோம் என்று இந்திய அணி கூறியது. ஆனால் இதனை ஏற்க மறுத்த மொசின் நக்வி கோப்பையை தன்னோடு எடுத்து கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால் இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்த பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும், மொசின் நக்விக்கும் இடையே ஐ.சி.சி. கூட்டத்தின் போது நடந்த பேச்சுவார்த்தையில் நக்வி இறங்கி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆசிய கோப்பை பிசிசிஐயிடம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.