வங்கதேசத்திற்கு ஆதரவு - டி20 உலகக் கோப்பையில் பங்கேற்குமா பாகிஸ்தான்?

10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது.;

Update:2026-01-23 07:05 IST

சென்னை,

டி20 உலக கோப்பைக்கு தயாராகும் பணியை பாகிஸ்தான் நிறுத்தி இருப்பதாக அந்நாட்டு செய்தி ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிப்பதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்தது.

எந்தவித காரணமும் இல்லாமல் தங்கள் நாட்டு வீரரை ஐ.பி.எல். அணியில் இருந்து நீக்கியதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த வங்காளதேசம், டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்தியா செல்லமாட்டோம் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய வங்காளதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல் , டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட விரும்புவதாகவும் ஆனால், இந்தியாவில் விளையாட மாட்டோம் எனவும் கூறி இருக்கிறார்.

இந்நிலையில், வங்கதேசத்திற்கு ஆதரவாக டி20 உலக கோப்பைக்கு தயாராகும் பணியை பாகிஸ்தான் நிறுத்தி இருப்பதாக அந்நாட்டு செய்தி ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. 10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்