ரஞ்சி கிரிக்கெட் போட்டி அக்டோபர் 15-ந் தேதி தொடக்கம்

உள்ளூர் போட்டிக்கான அட்டவணை குறித்து நேற்று நடந்த உயர்மட்ட கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது;

Update:2025-06-15 07:15 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

ரஞ்சி உள்பட உள்ளூர் போட்டிக்கான அட்டவணை குறித்து நேற்று நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய உயர்மட்ட கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டுக்கான (2025-26) ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 15-ந் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி வரை இரண்டு கட்டமாக நடக்கிறது.

ரஞ்சி கிரிக்கெட்டில் ஒவ்வொரு சீசனிலும் பிளேட் பிரிவில் சிறப்பாக செயல்படும் இரு அணிகள் எலைட் பிரிவுக்கு ஏற்றம் பெறும். அதேநேரத்தில் எைலட் பிரிவில் மோசமாக செயல்படும் இரு அணிகள் பிளேட் பிரிவுக்கு தரம் இறக்கப்படும். இனிமேல் ஒரு சீசன் முடிவில் ஒரு அணி ஏற்றம் பெறும். அதேபோல் ஒரு அணி தரம் இறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் துலீப் கோப்பை போட்டி ஆகஸ்டு 28-ந் தேதி முதல் செப்டம்பர் 15-ந் தேதி வரையும், இரானி கோப்பை போட்டி அக்டோபர் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துலீப் போட்டியில் மண்டலம் வாரியாக அணிகள் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்