ரஞ்சி கோப்பை: பீகார் அணியின் துணை கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமனம்

ரஞ்சி கோப்பையின் முதல் இரு ஆட்டங்களுக்கான பீகார் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.;

Update:2025-10-14 06:51 IST

பாட்னா,

91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நாளை தொடங்குகிறது. இதன் ‘எலைட்’ பிரிவில் 32 அணிகளும், ‘பிளேட்’ பிரிவில் 6 அணிகளும் என மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. ‘பிளேட்’ பிரிவில் இடம் பிடித்துள்ள பீகார் தனது முதலாவது ஆட்டத்தில் அருணாச்சலபிரதேச அணியை பாட்னாவில் எதிர்கொள்கிறது. அடுத்த ஆட்டத்தில் மணிப்பூரை சந்திக்கிறது. ரஞ்சி கோப்பையின் முதல் இரு ஆட்டங்களுக்கான பீகார் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

கேப்டனாக சகிபுல் கனி நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக 14 வயது அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டு இருக்கிறார். சூர்யவன்ஷி 2023-24-ம் ஆண்டுக்கான ரஞ்சி போட்டியில் தனது 12 வயதில் அறிமுகம் ஆனார். இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்த சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 35 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்