ஆல் டைம் சிறந்த ஐ.பி.எல். லெவன் அணியை தேர்வு செய்த ராயுடு.. யாருக்கெல்லாம் இடம்..?

ராயுடு தேர்வு செய்த அணியில் 2 ஆர்சிபி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.;

Update:2025-08-19 22:36 IST

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு, ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு ஆல் டைம் சிறந்த பிளேயிங் லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

அந்த அணியில் கிறிஸ் கெயில் மற்றும் விராட் கோலி ஆகிய 2 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்களை அவர் தேர்வு செய்துள்ளார். மேலும் அந்த அணியில் சிஎஸ்கே வீரர்களான மகேந்திரசிங் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் பிராவோ ஆகியோரையும் சேர்த்துள்ளார்.

ராயுடு தேர்வு செய்த அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் ரோகித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். மிடில் ஆர்டரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சுரேஷ் ரெய்னா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். பினிஷர்களாக மகேந்திரசிங் தோனி மற்றும் பொல்லார்டு ஆகியோரை தேர்வு செய்துள்ளார். மேலும் பவுலர்களாக லசித் மலிங்கா, பிராவோ, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சுனில் நரைன் ஆகியோரை அவர் தேர்வு செய்துள்ளார்.

ராயுடு தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த ஐ.பி.எல். பிளேயிங் லெவன்:

கிறிஸ் கெய்ல், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி, கீரன் பொல்லார்டு, லசித் மலிங்கா, டுவைன் பிராவோ, சுனில் நரைன் மற்றும் பும்ரா 

Tags:    

மேலும் செய்திகள்