'பச்சோந்தி' என்று கலாய்த்த ராயுடு.. தரமான பதிலடி கொடுத்த சித்து

சென்னை - பஞ்சாப் இடையிலான போட்டியின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.;

Update:2025-04-10 17:59 IST

முல்லான்பூர்,

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி மிகவும் தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 5 லீக் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இதில் முல்லான்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில்18 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. 

இந்த ஆட்டத்தில் வர்ணனையாளர்களாக இந்திய முன்னாள் வீரர்கள் ராயுடு மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் ராயுடு, "நீங்கள் (சித்து) ஒரே அணிக்கு ஆதரவு கொடுக்காமல் பச்சோந்தி போல அடிக்கடி அணியை மாற்றி கொள்கிறீர்கள்' என்று சித்துவை கலாய்த்தார்.

அதற்கு பதிலடி கொடுத்த சித்து, "இந்த உலகில் பச்சோந்தி என்று யாராவது இருந்தால் நீங்களும், உங்கள் ரோல்மாடலும்தான்" என்று பதிலடி கொடுத்தார்.

இதில் சித்து, ராயுடுவின் ரோல்மாடல் என்று குறிப்பிட்டது மகேந்திரசிங் தோனியைத்தான் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்