டெஸ்டில் இருந்து ஓய்வு: ரோகித், விராட் கோலியை இனி எப்போது சர்வதேச கிரிக்கெட்டில் காணலாம்..?

ரோகித் மற்றும் விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட உள்ளனர்.;

Update:2025-05-12 19:43 IST

image courtesy:PTI

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இதில் ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி தனது ஓய்வு முடிவை அறிவித்த நிலையில் விராட் கோலி இன்று அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் ஏற்கனவே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் இருந்தும் விடைபெற்று விட்டனர். ஆனால் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளனர். இதனால் இனி ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கான முடியும்.

இந்த சூழலில் இருவரும் இந்திய அணியில் அடுத்து எப்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடப் போகிறார்கள் என்பதை இங்கு காணலாம்..!

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் மாதம் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா களமிறங்க வாய்ப்பு உள்ளது. இதனால் ரோகித் மற்றும் விராட் கோலியை சர்வதேச கிரிக்கெட் களத்தில் காண ஏறக்குறைய 3 மாதங்களுக்கு மேல் ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்