சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ரசல்
வெஸ்ட் இண்டீஸ் அணி 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற ரசல் முக்கிய பங்கு வகித்தார்;
ஜமைக்கா,
வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரசல் , சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான ரசல், அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளுடன் , சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுவரை ஒரு டெஸ்ட், 56 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ரசல் விளையாடியுள்ளார்.84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரசல் 1,078 ரன்கள் எடுத்துள்ளார். 61 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்,
56 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரசல் 1,034 ரன்கள் எடுத்து, 70 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.வெஸ்ட் இண்டீஸ் அணி 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற ரசல் முக்கிய பங்கு வகித்தார்