எஸ்.ஏ. லீக் கிரிக்கெட்: சன்ரைசர்ஸ் அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற்றம்
29-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, எம்.ஐ. கேப்டவுன் அணியுடன் மோதியது.;
கெபேஹா,
6 அணிகள் இடையிலான 4-வது எஸ்.ஏ. லீக் டி20 கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் 29-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, எம்.ஐ. கேப்டவுன் அணியுடன் மோதியது.
முதலில் பேட் செய்த எம்.ஐ. கேப்டவுன் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரீஜா ஹென்ரிக்ஸ் 70 ரன்னும், ஜார்ஜ் லின்டே 30 ரன்னும் எடுத்தனர்.
தொடர்ந்து 149 ரன்கள் இலக்குடன் ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியால் சன்ரைசர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.