இளம் வீரர்கள் விராட் கோலியின் மனநிலையைப் பின்பற்ற வேண்டும்: முன்னாள் வீரர்

இளம் வீரர்கள் கோலியின் மனநிலையைப் பின்பற்ற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.;

Update:2026-01-20 08:17 IST

இந்தூர்,

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 337 ரன்கள் குவித்தது. டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர். அடுத்து ஆடிய இந்தியா 46 ஓவரில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.

இந்த போட்டியில் இந்தியாவின் வெற்றிகாக தனி ஆளாகப் போராடிய விராட் கோலி, சதமடித்து அசத்தினார். ஆனாலும் அவரது சதம் வீணானது. 

இந்நிலையில் இளம் வீரர்கள் கோலியின் மனநிலையைப் பின்பற்ற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டின் கோட். 52 ஒருநாள் சதங்களை எட்டிய அவரது சாதனை, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்ததுடன் அவரை ஒரு தனி உயரத்தில் வைத்துள்ளது.

கோலி எந்த ஒரு குறிப்பிட்ட "இமேஜுக்கும்" (Image) கட்டுப்படாமல், ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதே அவரது வெற்றிக்கான ரகசியம்.சில வீரர்கள் தங்களைப் பற்றிய எதிர்பார்ப்புகளுக்காக விளையாடுவார்கள், ஆனால் கோலி ரன்களைக் குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.இளம் வீரர்கள் கோலியின் மன உறுதி மற்றும் ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விதத்தைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்