ஒலிம்பிக்கில் விளையாடுவதே இலக்கு- ஸ்மித்

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2026-01-20 08:33 IST

மெல்போர்ன்,

34-வது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டும் இடம் பெற்றுள்ளது. 128 ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஒலிம்பிக்கில் விளையாடுவதே தனது முக்கிய இலக்கு என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

தற்போது பிக்பாஷ் டி20 லீக் போன்ற தொடர்களில் அபாரமாக விளையாடி வருவதன் மூலம் தனது ஒலிம்பிக் கனவை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்