யு19 உலகக்கோப்பை: தென்ஆப்பிரிக்கா முதல் வெற்றி
முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.;
ஜார்ஜியா,
16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது .பிப்ரவரி 7-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
நேற்று வின்ட்ஹோக்கில் நடந்த ஒரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா, அறிமுக அணியான தான்சானியாவை (டி பிரிவு) சந்தித்தது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுக்கு 397 ரன்கள் குவித்தது. கேப்டன் முகமது புல்புலியா (108 ரன்), ஜாசன் ரோலஸ் (125 ரன்) சதம் அடித்தனர். அடுத்து களமிறங்கிய தான்சானியா 32.2 ஓவர்களில் 68 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா 329 ரன்கள் வித்தியாசத்தில் முதலாவது வெற்றியை பெற்றது. இளையோர் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு அணியின் 2-வது பெரிய வெற்றி இதுவாகும்.