பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்கள்.... தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் ஆட உள்ளது.;
Image Courtesy: @ICC
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆட உள்ளது. இந்த தொடரில் முதலில் டெஸ்ட் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளும் நடக்கின்றன.
இந்த தொடர் அக்டோபர் 12ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்த தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு மேத்யூ ப்ரீட்ஸ்கே கேப்டனாகவும், டி20 அணிக்கு டேவிட் மில்லர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த டி காக் அந்த முடிவை திரும்ப பெற்றுள்ளார். இதையடுத்து அவர் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பிடித்துள்ளார். காயம் காரணமாக டெம்பா பவுமா இந்த தொடரில் இடம் பெறவில்லை.
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி விவரம்: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், கார்பின் போஷ், டெவால்ட் ப்ரீவிஸ், டோனி டி ஜோர்ஜி, ஜுபைர் ஹம்சா, சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கேசவ் மஹராஜ் (இரண்டாவது டெஸ்ட் மட்டும்), வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ப்ரீனெலன் சுப்ரயன், கைல் வெர்ரேய்ன்.
தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி விவரம்: மேத்யூ ப்ரீட்ஸ்கே (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் ப்ரீவிஸ், நாண்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், டோனி டி சோர்ஸி, டொனோவன் பெரீரா, ஜார்ன் போர்டுயின், ஜார்ஜ் லிண்டே, க்வேனா மபாகா, லுங்கி என்கிடி, நகாபா பீட்டர், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், சினெதெம்பா கேஷிலே.
தென் ஆப்பிரிக்க டி20 அணி விவரம்: டேவிட் மில்லர் (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் ப்ரீவிஸ், நாண்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், டொனோவன் பெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, க்வேனா மபாகா, லுங்கி என்கிடி, நகாபா பீட்டர், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஆண்டிலே சிமெலேன், லிசாட் வில்லியம்ஸ்.