டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு கோரும் ஸ்ரேயாஸ் ஐயர்..?

ஆஸ்திரேலியா ஏ-க்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டிருந்தார்.;

Update:2025-09-25 07:35 IST

image courtesy:PTI

மும்பை,

இந்தியா ஏ- ஆஸ்திரேலியா ஏ இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில் 2-வது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் முதல் போட்டியில் விளையாடினார். ஆனால் 2-வது போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து துருவ் ஜூரெல் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு வேண்டும் என்று ஸ்ரேயாஸ் ஐயர், பி.சி.சி.ஐ.-க்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், 'முதுகுவலி பிரச்னை காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு வேண்டும். முதுகு வலியால் 4-5 நாட்கள் நிலைத்து விளையாடும் அளவுக்கான வலிமை தனக்கு தற்போது இல்லை. அதோடு முதல் தர கிரிக்கெட்டிலும் சரி, இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சரி என்னுடைய உடற்தகுதியை கருத்தில் கொண்டே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். என்னால் ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது என்ற நிலைமை உண்டாகிவிட்டது. எனவே நான் சிவப்பு பந்து (டெஸ்ட்) கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வெடுத்துக் கொள்ள விரும்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்