கொல்கத்தா டெஸ்ட்: இந்திய அணிக்கு 124 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
153 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா அணி ஆட்டமிழந்தது.;
கொல்கத்தா,
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறக்கிய இந்தியா 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்தது.
இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெற்றது. பவுமா , கார்பின் போஷ் இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர் நிலைத்து ஆடிய போஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடி பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்ட பவுமா அரைசதமடித்து அசத்தினார். மறுபுறம் ஹர்மர் 7 ரன்களும், மஹாராஜா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் 153 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா அணி ஆட்டமிழந்தது.பவுமா 55 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால் இந்திய அணிக்கு 124 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட் , குல்தீப் யாதவ், சிராஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர் .