சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இலங்கை முன்னணி வீரர் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.;

Update:2025-02-04 12:59 IST

image courtesy: AFP

கொழும்பு,

இலங்கை அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர் ஆன திமுத் கருணாரத்னே (வயது 36) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் 6-ம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிதான் அவரது கடைசி சர்வதேச போட்டி என்று அறிவித்துள்ளார்.

 

இது அவரது 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக அவர் எடுத்துள்ள முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் இலங்கை அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 சதம் உள்பட 7172 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1 சதம் உள்பட 1316 ரன்கள் குவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்