டி20 கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் பாக்.வீரரை பின்னுக்கு தள்ளிய அர்ஷ்தீப் சிங்
ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.;
image courtesy:PTI
அபுதாபி,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - ஓமன் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 56 ரன்கள் அடித்தார். ஓமன் தரப்பில் ஷா பைசல், ஜிதன் ராமநந்தி, ஆமிர் கலீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஓமன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியா 21 ரன் வித்தியாசத்தில் தொடர்ந்து 3-வது வெற்றியை பெற்றது. ஓமன் அணியில் அதிகபட்சமாக ஆமீர் கலீம் 64 ரன்களும், ஹம்மது மிர்சா 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஹர்திக், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய விக்கெட்டையும் சேர்த்து அர்ஷ்தீப் சிங் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 100 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்த மைல்கல்லை அவர் 64 போட்டிகளில் எட்டியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் பவுலர் ஹாரிஸ் ரவூப்பை (71 போட்டிகள்) பின்னுக்கு தள்ளி அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. ரஷித் கான் - 53 போட்டிகள்
2. ஹசரங்கா - 63 போட்டிகள்
3. அர்ஷ்தீப் சிங் - 64 போட்டிகள்
4. ஹாரிஸ் ரவூப் - 71 போட்டிகள்
5. மார்க் ஆதிர் - 72 போட்டிகள்