டி20 கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக வென்ற வங்காளதேசம்

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என வங்காளதேசம் முழுமையாக கைப்பற்றியது.;

Update:2025-10-06 17:15 IST

Image Courtesy: @BCBtigers

சார்ஜா,

ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடந்து வருகிறது. டி20 போட்டியின் முதல் இரு ஆட்டங்களில் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 143 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக டார்விஷ் ரசூலி 32 ரன் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் சைபுதீன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த வங்காளதேச அணி 18 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 144 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என வங்காளதேசம் முழுமையாக கைப்பற்றியது.

Tags:    

மேலும் செய்திகள்