டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த டிம் டேவிட்
இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டிம் டேவிட் அரைசதம் அடித்தார்.;
image courtesy:PTI
ஹோபர்ட்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3-வது ஆட்டம் ஹோபர்ட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி டிம் டேவிட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரின் அதிரடி அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 74 ரன்களும், ஸ்டோய்னிஸ் 64 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 187 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
இந்த ஆட்டத்தில் டிம் டேவிட் வெறும் 23 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய 2-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற மாபெரும் சாதனையை டிம் டேவிட் படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. கேமரூன் கிரீன் - 19 பந்துகள்
2. டிம் டேவிட் - 23 பந்துகள்
3. டிராவிஸ் ஹெட் - 24 பந்துகள்