டி20 போட்டி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்த நமீபியா
தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.;
தென்ஆப்பிரிக்கா- நமீபியா அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டி20 போட்டி இன்று வின்ட்கோயக்கில் நடைபெற்றது. நமீபியா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது . டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டடோனோவன் பெரேரா பேட்டிங்கை தேர்வு செய்தார் அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ஜேசன் ஸ்மித் 31 ரன்கள் எடுத்தார்நமீபியா அணியில் ரூபன் ட்ரம்பெல்மான் 3 விக்கெட்டும், மேக் ஹெய்ங்கோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்..
பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா களம் இறங்கியது. முதல் மூன்று வீர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் எராமஸ் 21 ரன்களும், ஸ்மித் 14 பந்தில் 13 ரன்களும், மாலன் குருகர் 21 பந்தில் 18 ரன்களும் சேர்த்தனர்.
கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை நமீபியா வீரர் கிரீன் சிக்சருக்கு தூக்கினார். அதன்பின் 4 பந்தில் 4 ரன்கள் எடுத்தனர். கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. கிரீன் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட நமீபியா கடைசி பந்தில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.