இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: அதிரடி ஆட்டக்காரர் விலகல்.. தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவு
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.;
image courtesy:PTI
கார்டிப்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி கார்டிப் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற்றிருந்த அதிரடி ஆட்டக்காரர் ஆன டேவிட் மில்லர் காயம் காரணமாக விலகியுள்ளார். மேட்ச் வின்னரான இவரது விலகல் அந்த அணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க அணி விவரம்: மார்க்ரம் (கேப்டன்), கேசவ் மஹராஜ், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், கார்பின் போஷ், குவேனா மபாகா, ககிசோ ரபாடா, டெவால்ட் பிரெவிஸ், ரியான் ரிக்கல்டன், டொனோவன் பெரீரா, செனூரன் முத்துசாமி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், லுங்கி நிகிடி, லிசாட் வில்லியம்ஸ்.