டி20 தொடர்: வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நெதர்லாந்து அணி

நெதர்லாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.;

Update:2025-08-05 20:00 IST

Image Courtesy: @ICC  

சில்ஹெட்,

வங்காளதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது. இந்த தொடரை அடுத்து வங்காளதேச அணி, நெதர்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடருக்காக நெதர்லாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த தொடர் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் போட்டிகள் அனைத்து சில்ஹெட்டில் நடக்கிறது. எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரை முன்னிட்டு வங்காளதேச அணி நெதர்லாந்துடன் டி20 தொடரில் ஆட உள்ளது.

நெதர்லாந்துக்கு எதிராக இருதரப்பு தொடரை வங்காளதேசம் நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 தொடர் அட்டவணை:

முதல் போட்டி - ஆகஸ்ட் 30 - சில்ஹெட்

2வது போட்டி - செப்டம்பர் 1 - சில்ஹெட்

3வது போட்டி - செப்டம்பர் 3 - சில்ஹெட்

Tags:    

மேலும் செய்திகள்