டி20 போட்டி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் முழுமையாக கைப்பற்றியது.

Update: 2024-05-26 22:05 GMT

கோப்புப்படம் 

ஜமைக்கா,

தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் விளையாடியது. முன்னதாக நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஜமைக்காவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் வென் டர் டசன் 51 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஒபெட் மெக்காய் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் பிரண்டன் கிங், சேசன் சார்லஸ் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய சார்லஸ், 69 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பிரண்டன் கிங் 44 ரன்களும், கெயில் மேயர்ஸ் 36 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டும் இழந்து இலக்கை கடந்தது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.  

Tags:    

மேலும் செய்திகள்