டி20 உலகக்கோப்பை 2026: இதுவரை தகுதி பெற்றுள்ள அணிகள் எவை..?
2026 டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ளஉள்ளன.;
துபாய்,
2026-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில், மொத்தம் 20 அணிகள் விளையாட உள்ளன. இதில் தொடரை நடத்தும் அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தானாகவே தகுதி பெற்றுவிட்டன.
அதுபோக கடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியதன் அடிப்படையில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 7 அணிகள் தகுதி பெற்றன.
அத்துடன் டி20 போட்டிகளின் தரவரிசை அடிப்படையில் நியூசிலாந்து, அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய 3 அணிகள் தகுதி பெற்றன. மொத்தத்தில் 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
இதற்கான தகுதிசுற்றுகள் நடைபெற்று வருகின்றன. ஒரு சில இடங்களில் தகுதி சுற்று ஆட்டங்கள் நிறவடைந்துள்ளன. இதன் முடிவில் கனடா, நெதர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய அணிகள் 2026 டி20 உலகக்கோப்பைக்கு தகுதிபெற்றுள்ளன.
ஆக மொத்தம் உள்ள 20 இடங்களுக்கு 15 அணிகள் தற்போது வரை தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 5 அணிகள் தகுதி சுற்றுகளின் முடிவை பொறுத்து தீர்மானிக்கப்படும்.
டி20 உலகக்கோப்பை 2026 தொடருக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் விவரம்:-
இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், கனடா, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அமெரிக்கா.