டெஸ்ட் கிரிக்கெட்: 2-வது வீரராக அரிய சாதனை நிகழ்த்திய ஜோ ரூட்

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் ஜோ ரூட் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.;

Update:2025-08-02 10:51 IST

image courtesy:PTI

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது டெஸ்ட் டிரா) முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் அடித்தன.

அடுத்து 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் அடித்துள்ளது. ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தற்போது வரை 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்த இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஆன ஜோ ரூட் 29 ரன்கள் அடித்தார். இதனையும் சேர்த்து சொந்த மண்ணில் (இங்கிலாந்து) இந்தியாவுக்கு எதிராக ஜோ ரூட் இதுவரை 2 ஆயிரம் டெஸ்ட் ரன்கள் அடித்துள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக 2 ஆயிரம் ரன்கள் அடித்த 2-வது வீரர் என்ற அரிய சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன், இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 2 ஆயிரம் டெஸ்ட் ரன்கள் (2,354 ரன்கள்) அடித்து முதல் வீரராக இந்த அரிய சாதனையை நிகழ்த்தினார். தற்போது 2-வது வீரராக ஜோ ரூட்  இந்த சாதனையை படைத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்