டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து புறப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி

இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் வருகிற 20-ம் தேதி தொடங்க உள்ளது.;

Update:2025-06-06 10:20 IST

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) தொடரின் அங்கமாக நடைபெற உள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தொடர் வருகிற 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில்லின் முதல் சோதனை இது என்பதால் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் இருந்து விமானம் மூலம் இங்கிலாந்துக்கு நேற்றிரவு புறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்