தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக்: லண்டன் ஸ்பிரிட் அணியை வீழ்த்திய பர்மிங்காம் பீனிக்ஸ்
இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் (100 பந்துகள் கிரிக்கெட்) தொடர் நடைபெற்று வருகிறது.;
Image Courtesy: @thehundred
லண்டன்,
இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் (100 பந்துகள் கிரிக்கெட்) தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் பர்மிங்காம் பீனிக்ஸ் - லண்டன் ஸ்பிரிட் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லண்டன் ஸ்பிரிட் அணி 100 பந்துகளில் 6 விக்கெட்டை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. லண்டன் ஸ்பிரிட் அணி தரப்பில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 33 ரன் எடுத்தார். பர்மிங்காம் பீனிக்ஸ் தரப்பில் பவுல்ட், லிவிங்ஸ்டன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 127 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பர்மிங்காம் பீனிக்ஸ் அணி 65 பந்துகளில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 131 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பர்மிங்காம் பீனிக்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜோ கிளார்க் 54 ரன் எடுத்தார்.