முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு
முத்தரப்பு டி20 தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.;
image courtesy:twitter/@ZimCricketv
ஹராரே,
ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அதன்படி தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டன .
இந்த சூழலில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - ஜிம்பாப்வே அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி ஜிம்பாப்வே முதலில் பந்துவீச உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
நியூசிலாந்து: டிம் ராபின்சன், டிம் சீபர்ட்(w), ரச்சின் ரவீந்திர, மார்க் சாப்மேன், பெவன் ஜேக்கப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர்(கேப்டன்), ஜகரி பவுல்க்ஸ், மேட் ஹென்றி, இஷ் சோதி, வில்லியம் ஓரூர்க்
ஜிம்பாப்வே: டியான் மியர்ஸ், பிரையன் பென்னட், கிளைவ் மடாண்டே, சிக்கந்தர் ராசா (கேப்டன்), ரியான் பர்ல், தஷிங்கா முசெகிவா, டோனி முனியோங்கா, டினோடெண்டா மபோசா, வெலிங்டன் மசகட்சா, ரிச்சர்ட் ங்காராவா, ட்ரெவர் குவாண்டு