முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

ஜிம்பாப்வே அணி தனது முதல் ஆட்டத்தில் தோல்வி கண்டுள்ளது.;

Update:2025-07-18 06:17 IST

image courtesy:twitter/@ZimCricketv

ஹராரே,

ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இதில் இன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

ஜிம்பாப்வே தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியை தழுவியது. மறுபுறம் நியூசிலாந்து அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை ஜிம்பாப்வே அணி எப்படி சமாளிக்க போகிறது என்பதை காண ரசிகர்களிடையே ஆவல் எழுந்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்