இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வீட்டில் திருட்டு
வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.;
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன். இவருக்கு மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் டிக்னோ பாத் பகுதியில் பங்களா வீடு உள்ளது.
இந்நிலையில், அசாருதீன் வீட்டில் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 2 மாதங்களாக அந்த வீட்டில் யாரும் வசிக்காததால் வீடு பூட்டப்பட்டிருந்தது. அதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அங்கு வீட்டின் பீரோவில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம், வீட்டில் இருந்த 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின்சாதனங்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும், வீட்டின் கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து அசாருதீனின் மேளாலர் புனே போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.