இரண்டு வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு... ரகானே தேர்வு செய்த இந்திய பிளேயிங் லெவன்
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.;
Image Courtesy: @BCCI
லீட்ஸ்,
சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி லீட்சில் இன்று தொடங்குகிறது. தற்போது நடைபெறும் டெஸ்ட் போட்டி முந்தைய போட்டிகளை விட சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஏனெனில் அனுபம் வாய்ந்த வீரர்கள் இல்லாத இளம்படை கொண்ட இந்திய வீரர்கள் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில், இந்த தொடர் குறித்தும், முதல் டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவன் குறித்தும் பல வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவின் அஜிங்ய ரகானே இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளார். அதில் அவர் சாய் சுதர்சன் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இரண்டு பேரையும் அறிமுக வீரர்களாக தேர்ந்தெடுத்துள்ளார். மேலும், துருவ் ஜுரெல் மற்றும் ஷர்துல் தாக்கூரையும் பிளேயிங் லெவனில் தேர்வு செய்துள்ளார்.
ரகானே தேர்வு செய்த பிளேயிங் லெவன் விவரம்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.