ஐபிஎல் மீண்டும் எப்போது தொடங்கும் ? வெளியான புதிய தகவல்

புதிய அட்டவணை குறித்த விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்;

Update:2025-05-11 16:11 IST

மும்பை,

10 அணிகள் பங்கேற்ற 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியை தொடர்ந்து பாகிஸ்தான் தீவிர தாக்குதலில் ஈடுபட்டதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இதனால் ஐ.பி.எல். போட்டியை தொடர்ந்து நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து அவசரமாக ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல். போட்டி தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக நேற்று முன்தினம் அறிவித்தது. மேலும் புதிய அட்டவணை குறித்த விவரங்கள் சூழ்நிலையை கவனமாக ஆராய்ந்த பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது.

இந்த நிலையில் ஐபிஎல் மீண்டும் வரும் வியாழக்கிழமை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் போட்டி நடைபெறும் எனவும் இறுதிப்போட்டி வரும் 30ம் தேதி நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்