அவரால் ஏன் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது..? இந்திய முன்னாள் கேப்டன் கேள்வி

ரஞ்சி கோப்பை தொடரில் முகமது ஷமி அற்புதமாக பந்துவீசி வருகிறார்.;

Update:2025-11-11 11:33 IST

image courtesy:PTI

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின்போது ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் குணமடைந்த அவர் உள்ளூர் தொடர்களில் விளையாடி இழந்த பார்மை மீட்டெடுத்தார். பின்னர் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார்.

இருப்பினும் அதன்பின் நடைபெற்ற தொடர்களில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. தற்போது ரஞ்சி கோப்பை தொடரில் அற்புதமாக பந்துவீசி வரும் அவர் 2 போட்டிகளில் ஆடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்கால் அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

இதனால் எதிர்வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அதிலும் அவர் இடம்பெறவில்லை. இது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் முழு உடற்தகுதியுடன் உள்ள ஷமியால் ஏன் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது? என்று இந்திய முன்னாள் கேப்டனான கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ரஞ்சி கிரிக்கெட்டில் அற்புதமாக பந்து வீசினார். அவரது பந்து வீச்சை தேர்வாளர்கள் நிச்சயம் பார்த்து இருப்பார்கள். அவரால் ஏன் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது? அவர் இந்திய அணிக்கு விரைவில் திரும்புவார் என நம்புகிறேன்” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்