வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறந்த இந்திய பிளேயிங் லெவனை தேர்வு செய்த வில்லியம்சன்
வில்லியம்சன் தேர்வு செய்த அணியில் ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா இடம்பெறவில்லை.;
image courtesy:PTI
வெலிங்டன்,
வெள்ளைப்பந்து கிரிக்கெட் (ஒருநாள் மற்றும் டி20 போட்டி) வரலாற்றில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்திய இந்திய வீரர்களை கொண்டு ஆல்டம் சிறந்த இந்திய பிளேயிங் லெவனை நியூசிலாந்து வீரரான வில்லியம்சன் தேர்வு செய்துள்ளார்.
அந்த அணியில் மகேந்திரசிங் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி போன்ற வீரர்களை தேர்வு செய்த அவர் ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜாவை தேர்வு செய்யாமல் ஆச்சரியம் அளித்துள்ளார்.
கேன் வில்லியம்சன் தேர்வு செய்த ஆல் டைம் இந்திய வெள்ளைப்பந்து பிளேயிங் லெவன்:
வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா, விராட் கோலி, சச்சின் தெண்டுல்கர், யுவராஜ் சிங், சூர்யகுமார் யாதவ், எம்எஸ் தோனி, ஜஸ்பிரித் பும்ரா, அனில் கும்ப்ளே, ஜாகீர் கான், முகமது ஷமி.