ஒரு போட்டி மட்டுமே மீதம்.. ஆரஞ்சு தொப்பியை சாய் சுதர்சனிடம் இருந்து விராட் கோலி தட்டிப்பறிப்பாரா?

ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் குவித்த வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்படுகிறது.;

Update:2025-06-03 15:52 IST

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இறுதிப்போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. இதில் லீக் மற்றும் பிளே ஆப் சுற்றுகளின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றோடு வெளியேறின.

இந்த சூழலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

முன்னதாக ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்படுவது வழக்கம். அந்த சூழலில் நடப்பு சீசனில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் சாய் சுதர்சன் 759 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளதுடன் ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ள்ளார்.

அவருக்கு அடுத்த இடங்களில் சூர்யகுமார் யாதவ் (717 ரன்கள்), சுப்மன் கில் (650 ரன்கள்), மிட்செல் மார்ஷ் (627 ரன்கள்) மற்றும் விராட் கோலி (614 ரன்கள்) ஆகியோர் உள்ளனர். இதில் சூர்யகுமார், கில், மார்ஷ் ஆகியோருக்கு இனி வாய்ப்பில்லை. விராட் கோலிக்கு மட்டுமே ஒரு போட்டி (இறுதிப்போட்டி) எஞ்சியுள்ளது.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் விராட் கோலி 146 ரன்கள் அடித்தால் சாய் சுதர்சனிடம் இருந்து ஆரஞ்சு தொப்பியை தட்டிப்பறிப்பார். 

Tags:    

மேலும் செய்திகள்